திரைவிலக்க மாட்டோம்..


உன் எச்சில்
ஊறும் இச்சைக்காக
தடைச்செய்ய  நினைத்தாயோ;
எங்களைத் தடுத்திடத் துடித்தாயோ!

அடிமை ஏதுமில்லை
தனிமைப் பட்டமும்  இல்லை;
உன் பசிக்கொண்ட
பார்வைக்கு வழியவந்து
ஒளிந்திருக்கிறேன்!

தடுமாறும்
தடம்மாறும் உன்
மனதிற்குத் திரைப்போட
நான் திரையிட்டுவந்தேன்!

கல்விக் கற்க
பள்ளிக்கு திறந்து வரச்செய்கிறாய்;
அறிவு செய்யும் வேலைக்கு
அங்கம் காட்டச்சொல்கிறாய்!

விபச்சாரத்திற்கு வித்திட்டு
உபச்சாரம் செய்கிறாய்;
பெண்ணடிமைக்கு மாற்று பெயரிற்று
கலாச்சாராம் என்கிறாய்!

வெத்துப் பேச்சிக்கு
விலைப்போக மாட்டோம்;
வெட்டிப் போட்டாலும்
திரைவிலக்க மாட்டோம்!

உன் எச்சில்
ஊறும் இச்சைக்காக
தடைச்செய்ய  நினைத்தாயோ;
எங்களைத் தடுத்திடத் துடித்தாயோ!

அடிமை ஏதுமில்லை
தனிமைப் பட்டமும்  இல்லை;
உன் பசிக்கொண்ட
பார்வைக்கு வழியவந்து
ஒளிந்திருக்கிறேன்!

தடுமாறும்
தடம்மாறும் உன்
மனதிற்குத் திரைப்போட
நான் திரையிட்டுவந்தேன்!

கல்விக் கற்க
பள்ளிக்கு திறந்து வரச்செய்கிறாய்;
அறிவு செய்யும் வேலைக்கு
அங்கம் காட்டச்சொல்கிறாய்!

விபச்சாரத்திற்கு வித்திட்டு
உபச்சாரம் செய்கிறாய்;
பெண்ணடிமைக்கு மாற்று பெயரிற்று
கலாச்சாராம் என்கிறாய்!

வெத்துப் பேச்சிக்கு
விலைப்போக மாட்டோம்;
வெட்டிப் போட்டாலும்
திரைவிலக்க மாட்டோம்!

2 comments:

  1. அருமையாக சொல்லியிருக்கறீர்கள் நண்பா...

    புனித மதத்தின் கோட்பாடுகள் எஙகே புரியப்போகிறது இழிவானவர்களுக்கு..

    ReplyDelete
  2. // அறிவு செய்யும் வேலைக்கு
    அங்கம் காட்டச்சொல்கிறாய்!//
    நெத்தியடி வரிகள்.....

    ReplyDelete