இப்படிக்கு உங்கள் மகன்..


தட்டுத் தடுமாறி
சிந்தும் எச்சிலோடு
அம்மா என்றழைப்பேன்!

வரம் தந்த அன்னையோ
விரல் கொண்டுக் கோதி
அத்தா என்றழை என்பார்!

புரியாத எனக்கு
புன்னகையோடு
பூப்பேன் அத்தா என்று!

என் காதோடு சூடானக்
கைப்பேசியில் அத்தா நீ
முத்தமிடும் சப்தம்!

நான் போடும் சப்தத்தில்
சப்தமில்லாமல் உன் முத்தம்
காற்றோடுக் கலக்கும்!

புகைப்படம் ஒன்றைக் காட்டி
அத்தா என்பார் அன்னை;
விளங்காத நானோ
விளக்கம் கேட்பேன் வெகுளியாய்!

நண்பர்களின் அத்தா மட்டும்
நடைபோடும் புன்முறுவலுடன்;
எனக்கு மட்டும் அத்தா புகைப்படமா என!

கலங்கியக் கண்ணீரை
முந்தாணியால் முத்தமிட்டு
என்னை செல்லமாகத் திட்டிவிட்டு
செல்வார் அன்னை!

தினந்தோறும் உங்கள்
குரல் மட்டும் தரிசனமாய்
எங்கள் மீது கரிசனமாய்!

அடைக்காக்கும் அன்னையோ
கொஞ்சம் விலகி செல்கிறாள்-என்னைக்
கொஞ்ச மறந்துசெல்கிறாள்!

காரணம் வந்துவிட்டீர்களாம்
வளைகுடாவில் இருந்து நீங்கள்;
என்னைத் தவிர்த்து
உங்களிடம் சிரிப்பது;
வெறுப்பானது எனக்கு!

எப்போதாவது நீங்கள்
காட்சியளிப்பதற்கு
எப்போதும் போலவே
புகைப்படம் போதும் 
எங்களுக்கு!

இப்படிக்கு உங்கள்
மகன் – U.K.G

தட்டுத் தடுமாறி
சிந்தும் எச்சிலோடு
அம்மா என்றழைப்பேன்!

வரம் தந்த அன்னையோ
விரல் கொண்டுக் கோதி
அத்தா என்றழை என்பார்!

புரியாத எனக்கு
புன்னகையோடு
பூப்பேன் அத்தா என்று!

என் காதோடு சூடானக்
கைப்பேசியில் அத்தா நீ
முத்தமிடும் சப்தம்!

நான் போடும் சப்தத்தில்
சப்தமில்லாமல் உன் முத்தம்
காற்றோடுக் கலக்கும்!

புகைப்படம் ஒன்றைக் காட்டி
அத்தா என்பார் அன்னை;
விளங்காத நானோ
விளக்கம் கேட்பேன் வெகுளியாய்!

நண்பர்களின் அத்தா மட்டும்
நடைபோடும் புன்முறுவலுடன்;
எனக்கு மட்டும் அத்தா புகைப்படமா என!

கலங்கியக் கண்ணீரை
முந்தாணியால் முத்தமிட்டு
என்னை செல்லமாகத் திட்டிவிட்டு
செல்வார் அன்னை!

தினந்தோறும் உங்கள்
குரல் மட்டும் தரிசனமாய்
எங்கள் மீது கரிசனமாய்!

அடைக்காக்கும் அன்னையோ
கொஞ்சம் விலகி செல்கிறாள்-என்னைக்
கொஞ்ச மறந்துசெல்கிறாள்!

காரணம் வந்துவிட்டீர்களாம்
வளைகுடாவில் இருந்து நீங்கள்;
என்னைத் தவிர்த்து
உங்களிடம் சிரிப்பது;
வெறுப்பானது எனக்கு!

எப்போதாவது நீங்கள்
காட்சியளிப்பதற்கு
எப்போதும் போலவே
புகைப்படம் போதும் 
எங்களுக்கு!

இப்படிக்கு உங்கள்
மகன் – U.K.G

3 comments:

  1. சூப்பர்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்...

    ReplyDelete
  2. அன்னையின் மடல்
    "தாயின் காலடியில் சுவனம் இருக்கிறது" எனும்நபி மொழி
    மூன்று விஷயங்களை கண்களால் காண்பதே பாக்கியம் என்று, அன்று சொன்னார்களே அகிலத்தின் அருட்கொடை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்!அதில் ஒன்று தாயின் முகமல்லவா?

    உங்கள் கவிதையின் உயிர் ஓட்டம் மெய் சிலிர்க்க வைகின்றது .அலை ஓய்ந்தாலும் உங்கள் கவிதையின் கற்பனை
    ஓயாது . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. தாயின் வலி ஒருவிதமெனில்.. குழந்தையின் வலியோ வேறு விதமாய்.. நல்ல கவிதை! எனினும், கவிதையின் ‘கரு’வில் இருநிலை தொணி! குழந்தையின், தந்தையை காணாத ஏக்கம்.. கண்டப்பின் சலிப்பும் விரக்தியும்.. எங்கேயோ ஒரு நெருடல். ஆயினும் நல்ல பதிவு!

    ReplyDelete