மறந்துவிட்டான்


எதுவும் தராத
என் தந்தைக்குப் பதிலடியாய்;
என் பிள்ளைக்கு நான் தர
நாடு தாண்டி வந்தேன்!
நாதியற்று நின்றேன்!

சுட்டெரிக்கும் வெயிலிலும்
கட்டிப்பிடித்துச் சிரிப்பேன்;
நிழற்கூட இல்லா இடத்தில்
உன் நிழற்படம் கண்டு ரசிப்பேன்!

புரியாத உன் பேச்சைப்
பதிவு செய்துக் கேட்பேன்;
தனிமையில் சிரித்து சிரித்து
அழுதுக்கொண்டேப் படுப்பேன்!

 விடுமுறைக்கு வந்த என்னை
எட்டி நின்றேப் பார்த்தாய்;
தொட்டுத் தூக்கவந்த என்னை
முறைத்துவிட்டுச் சென்றாய்!

அகம் அழுது உன்
அன்னையைக் கண்டால்;
சிரித்துக்கொண்டே
மறந்துவிட்டான் என்றாள்!

எதுவும் தராத
என் தந்தைக்குப் பதிலடியாய்;
என் பிள்ளைக்கு நான் தர
நாடு தாண்டி வந்தேன்!
நாதியற்று நின்றேன்!

சுட்டெரிக்கும் வெயிலிலும்
கட்டிப்பிடித்துச் சிரிப்பேன்;
நிழற்கூட இல்லா இடத்தில்
உன் நிழற்படம் கண்டு ரசிப்பேன்!

புரியாத உன் பேச்சைப்
பதிவு செய்துக் கேட்பேன்;
தனிமையில் சிரித்து சிரித்து
அழுதுக்கொண்டேப் படுப்பேன்!

 விடுமுறைக்கு வந்த என்னை
எட்டி நின்றேப் பார்த்தாய்;
தொட்டுத் தூக்கவந்த என்னை
முறைத்துவிட்டுச் சென்றாய்!

அகம் அழுது உன்
அன்னையைக் கண்டால்;
சிரித்துக்கொண்டே
மறந்துவிட்டான் என்றாள்!

1 comment:

  1. சித்திக்November 28, 2010 at 9:49 AM

    விடுமுறைக்கு வந்த என்னை
    எட்டி நின்றேப் பார்த்தாய்;
    தொட்டுத் தூக்கவந்த என்னை
    முறைத்துவிட்டுச் சென்றாய்!
    அழகிய வரிகள் !!!

    ReplyDelete