சுயநலமாய் சிரிப்பேன்..




இருளைக் கிழிக்கும் ஒளியும்;
அமைதியைக் குலைக்கும்
உன் ஒலியும்!

உன் அழுக்குரலும்
ஆனந்தமாய்;
சிரித்து ரசிப்பேன்
சுயநலமாய்!

சிரிப்பாய் சிணுங்குவாய்
உதடுக் கடிப்பாய் என்
உள்ளம் கடிப்பாய்;
ஒத்த முகத்தில்
ஒராயிரம் பாவணைகள்!

உருகிப்போவேன்
உதைக்கும் உன் பாதங்களுக்கு;
வலிக்குமோ என்று!

இல்லாமல் தவித்து;
சொல்லாமல் அழும்
எத்தனையோ
குடும்பத்திற்கு நடுவே;
இன்பத்திற்கு வித்தாய்
எங்களுக்குச் சத்தாய்;
மழலைத் தந்த மறையோனுக்கு
மண்டியிட்டு முத்தமிடுகிறேன்
நெற்றியினாலே!



இருளைக் கிழிக்கும் ஒளியும்;
அமைதியைக் குலைக்கும்
உன் ஒலியும்!

உன் அழுக்குரலும்
ஆனந்தமாய்;
சிரித்து ரசிப்பேன்
சுயநலமாய்!

சிரிப்பாய் சிணுங்குவாய்
உதடுக் கடிப்பாய் என்
உள்ளம் கடிப்பாய்;
ஒத்த முகத்தில்
ஒராயிரம் பாவணைகள்!

உருகிப்போவேன்
உதைக்கும் உன் பாதங்களுக்கு;
வலிக்குமோ என்று!

இல்லாமல் தவித்து;
சொல்லாமல் அழும்
எத்தனையோ
குடும்பத்திற்கு நடுவே;
இன்பத்திற்கு வித்தாய்
எங்களுக்குச் சத்தாய்;
மழலைத் தந்த மறையோனுக்கு
மண்டியிட்டு முத்தமிடுகிறேன்
நெற்றியினாலே!

No comments:

Post a Comment