சிறையென்றுமில்லை


பெண்ணும் பேனாவும்
ஓன்றோ;
மை இல்லையென்றால்
மதிப்பில்லை அன்றோ!

பால் சுரக்கும்
மார்பும்;
கணவன் காணும்
இடையும்;
காட்சிப்பொருளா என்ன?

குறுக்குறுக்கும் கவர்ச்சியும்;
தூண்டிவிடும் கிளர்ச்சியும்
ஆடவனுக்கு உண்டா?

விரசத்தோடு விழியும்;
உரச நினைக்கும் விரலும்;
ஆண்மகனுக்கு நீ விருந்தா;
நடைப்பாதையில் கடைப்போடும்
ஆண்மைவிருத்திக்கான மருந்தா?

அவமானம் ஏதுமில்லை;
அவள் மானம் பெரிது;
வெகுமானம் கண்டு;
பிறர் கண்ணை உறுத்தாதத்
தன்மானம் உண்டு!

சிறையென்றுமில்லை;
குறை இன்று வரையில்லை;
வளர்ச்சிக்குத் தடையேதுமில்லை;
முன்னேற்றத்தில்
முடமாகவில்லை!


பெண்ணும் பேனாவும்
ஓன்றோ;
மை இல்லையென்றால்
மதிப்பில்லை அன்றோ!

பால் சுரக்கும்
மார்பும்;
கணவன் காணும்
இடையும்;
காட்சிப்பொருளா என்ன?

குறுக்குறுக்கும் கவர்ச்சியும்;
தூண்டிவிடும் கிளர்ச்சியும்
ஆடவனுக்கு உண்டா?

விரசத்தோடு விழியும்;
உரச நினைக்கும் விரலும்;
ஆண்மகனுக்கு நீ விருந்தா;
நடைப்பாதையில் கடைப்போடும்
ஆண்மைவிருத்திக்கான மருந்தா?

அவமானம் ஏதுமில்லை;
அவள் மானம் பெரிது;
வெகுமானம் கண்டு;
பிறர் கண்ணை உறுத்தாதத்
தன்மானம் உண்டு!

சிறையென்றுமில்லை;
குறை இன்று வரையில்லை;
வளர்ச்சிக்குத் தடையேதுமில்லை;
முன்னேற்றத்தில்
முடமாகவில்லை!

1 comment:

  1. சித்திக்January 25, 2011 at 11:39 AM

    முற்றிலும் உண்மை .. சிறந்த படைப்பு !!

    ReplyDelete