நல்ல நட்பு


நட்பு கற்பு என்று
கட்டம் கட்டுவேனா;
பாதை மாறும் உன்
பாதத்தைக்
கண்டும் காணாமல்
கண்டுக் களிப்பேனா!

குத்திக்காட்டி உன்
மனதிற்குக்
கத்தியிடுவேனா!
முகம் சுளிக்கும் உன்
அகம் இருளும் போது
தடுக்காமல் இருப்பேனா!

தீமையைத்
தடுப்பதைக் கொண்டு – நீ
வெடிப்பதைக் கண்டு
பயந்து நான் ஓடுவேனா!

கஷ்டத்திற்கு மட்டும்
உன்னை
இஷ்டமாக்குவேனா;
இஷ்டப்பட்டு - நான்
சுயநலவாதியானால்
உனக்கு நல்ல
நண்பன் ஆவேனா!

நட்பு கற்பு என்று
கட்டம் கட்டுவேனா;
பாதை மாறும் உன்
பாதத்தைக்
கண்டும் காணாமல்
கண்டுக் களிப்பேனா!

குத்திக்காட்டி உன்
மனதிற்குக்
கத்தியிடுவேனா!
முகம் சுளிக்கும் உன்
அகம் இருளும் போது
தடுக்காமல் இருப்பேனா!

தீமையைத்
தடுப்பதைக் கொண்டு – நீ
வெடிப்பதைக் கண்டு
பயந்து நான் ஓடுவேனா!

கஷ்டத்திற்கு மட்டும்
உன்னை
இஷ்டமாக்குவேனா;
இஷ்டப்பட்டு - நான்
சுயநலவாதியானால்
உனக்கு நல்ல
நண்பன் ஆவேனா!

2 comments:

  1. கவிதை யாருக்கோ செய்தி சொல்ற மாதிரி இருக்கு.. அதனால, புரிஞ்சும் புரியாம இருக்கு..

    நெறைய எழுதுங்க நண்பரே ))

    ReplyDelete
  2. கருத்து தெரிவித்த நண்பர் கறுவல் அவர்களுக்கு மிக்க நன்றி.நல்ல நட்பு அல்லது ஒரு நல்ல நண்பன் தீயவையின் பக்கம் போகும் மற்றொரு நண்பனிடம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப்போல் எழுதியிருக்கிறேன்.யாருக்கோ செய்திச் சொல்ல;நமக்கான செய்திதான்.இன்னும் எழுத வாழ்த்தியதற்கு நன்றி.

    ReplyDelete