செல்வந்தன்



கிழிந்த ஓரமும்
அழுக்குச் சட்டையும்;
அடுத்த வேளை
உணவுண்டா அறியா!

காய்ந்துப்போனச்
சிகையும் வயிறும்;
நின்றுக் களைத்துப்போன
முதுகெலும்பும்
சிணுங்கிக்கொண்டுப்
படுக்கத் தேடும் இடம்;
சாலை ஓரமா;
இல்லை ஓரத்தில்
உள்ள மரமா நானறியா!

சோகத்திற்குச்
சுண்ணாம்பு அடித்து;
பறிக்கும் புன்னகைச்
செய்யும் நான்தான்
செல்வந்தன் இன்று!


கிழிந்த ஓரமும்
அழுக்குச் சட்டையும்;
அடுத்த வேளை
உணவுண்டா அறியா!

காய்ந்துப்போனச்
சிகையும் வயிறும்;
நின்றுக் களைத்துப்போன
முதுகெலும்பும்
சிணுங்கிக்கொண்டுப்
படுக்கத் தேடும் இடம்;
சாலை ஓரமா;
இல்லை ஓரத்தில்
உள்ள மரமா நானறியா!

சோகத்திற்குச்
சுண்ணாம்பு அடித்து;
பறிக்கும் புன்னகைச்
செய்யும் நான்தான்
செல்வந்தன் இன்று!

1 comment:

  1. புன்னகையில் செல்வந்தன் என்றுமே ஏழை தான்...
    ஏனெனில் அவன் விழியின் ஈரம் கூட வற்றி போய் விட்டிருக்கும்

    ReplyDelete