புதுக்கவிதை



குறளடி, சிந்தடி,
அளவடி, நெடிலடி
கழிநெடிலடி;
மூளைக்கு செலுத்துகையிலே
முகமும் வியர்க்கும்!

சந்தப்பா சிந்துப்பா
இசைப்பா வகைகளால்;
அப்பப்பா – எழுதவே
விரல்கள் நகராமல்;
எழுத்துக்களும்
தர்ணா போராட்டம்!

எதுகை மோனை
சீர், தளை,
அடி, தொடை – என
அங்குலம் அங்குலமாய்
அங்குசமாய்!

ஏக்கமாய் கலக்கமாய்
நோக்கையிலே;
பிறந்தது புதுக்கவிதை;
வரைமுறை இல்லை;
வரையும் முறையும்
தேவையில்லை!

பத்து வரிக்கும் மிகாமல்
கவிதை முழுமையடையாது
கட்டுப்பாட்டை உடைத்து;
விழுந்தது புதுக்கவிதை!
  
சொற்களில் புதைந்த
கவிதையை;
கருத்தில் புதைத்து;
புடைத்தது புதுக்கவிதை!!



குறளடி, சிந்தடி,
அளவடி, நெடிலடி
கழிநெடிலடி;
மூளைக்கு செலுத்துகையிலே
முகமும் வியர்க்கும்!

சந்தப்பா சிந்துப்பா
இசைப்பா வகைகளால்;
அப்பப்பா – எழுதவே
விரல்கள் நகராமல்;
எழுத்துக்களும்
தர்ணா போராட்டம்!

எதுகை மோனை
சீர், தளை,
அடி, தொடை – என
அங்குலம் அங்குலமாய்
அங்குசமாய்!

ஏக்கமாய் கலக்கமாய்
நோக்கையிலே;
பிறந்தது புதுக்கவிதை;
வரைமுறை இல்லை;
வரையும் முறையும்
தேவையில்லை!

பத்து வரிக்கும் மிகாமல்
கவிதை முழுமையடையாது
கட்டுப்பாட்டை உடைத்து;
விழுந்தது புதுக்கவிதை!
  
சொற்களில் புதைந்த
கவிதையை;
கருத்தில் புதைத்து;
புடைத்தது புதுக்கவிதை!!

3 comments:

  1. சொற்களில் புதைந்த
    கவிதையை;
    கருத்தில் புதைத்து;
    புடைத்தது புதுக்கவிதை!!

    இந்த அருமையான கவிதை போலவும்...
    மனம் கவர்ந்த அருமையான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி தோழர் Ramani அவர்களே!

      Delete
  2. அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் யாசர் அரஃபாத்
    http://nidurseasons.blogspot.in/2014/03/blog-post_29.html

    ReplyDelete